மலையக மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளைவரை முன்னெடுக்கப்பட்டுவரும் மலையக எழுச்சி பயணத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று மாத்தளையில் இடம்பெறவுள்ளது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக எழுச்சி பயணம்’ முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
2023 ஜுலை 28 ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமாகவுள்ள குறித்த பாத யாத்திரை இன்று மாத்தளையை வந்தடையவுள்ளது. முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், சிவில் அமைப்புகள் மற்றும் மலையக சமூகம்சார் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய “மாண்புமிகு மலையக மக்கள்” கூட்டிணைவினால் இப்பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .










