மாத்தளைக்கு கடந்த 08 மாதமாக மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மாத்தளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் மாத்தளை மாநகர எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் வினவியபோது,
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் தமது எரிபொருள் நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.
மாத்தளை வாழ் மக்களுக்கு மண்ணெண்ணெயை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவன செய்யுமாறு மாத்தளை மாவட்ட செயலாளர் திருமதி தேஜானி திலகரத்தினவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அது இன்னமும் சாத்தியமாகவில்லை என உஜத் அனுராத தெரிவித்தார்.










