மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் வருடாந்த முத்தமிழ் விழா எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
மன்றத் தலைவர் ஏ. யோகராஜா தலைமையில் மாத்தளை ஶ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதீயாக மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு பேச்சாளர்களாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையானர் கலாநிதி ஆர். ரமேஷ், யாழ். பல்கலைக்கழகத்தின்சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பி. தனபாலன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
