பல்வேறு துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்கள் மார்ச் 1ஆம் தேதி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அடக்குமுறை வரிக் கொள்கையை திருத்தக் கோரி நியாயமான கோரிக்கைகளை முன்வைத்ததாக நிபுணத்துவ தொழிற்சங்கக் கூட்டணி (PTUA) தெரிவித்துள்ளது.
எனினும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பரந்தளவிலான தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பானது, அதன்படி புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திணைக்களம், பணப்பரிவர்த்தனைகள் மற்றும் பிராந்திய அலுவலகங்களின் செயற்பாடுகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என மத்திய வங்கியின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
