மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை நாளை மறுதினம் (10) சனிக்கிழமை தலவாக்கலை ரெஸ்ட் ஹவுஸ் மண்டபத்தில் கூடவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளரும், கவுன்சில் உறுப்பினரும்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்பீட உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
“ மலையக மக்கள் முன்னணி அதன் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையக இளைஞர் முன்னணி, மலையக மகளீர் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த தேசிய சபை கூட்டத்தில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ம.ம.மு சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்படும் பிரச்சார கூட்டத்தொடர் தொடர்பிலான தீர்மானம், முன்னணியின் தலைவர் கலந்துக்கொள்ளும் 100 மக்கள் சந்திப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.” எனவும் அவர் கூறினார்.
தகவல் – நீலமேகம் பிரசாந்த்