மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு யாழ். மீனவர்கள் போராட்டம்! (படங்கள்)

ஏ9 வீதி மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏ9 வீதி முடங்கி- போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டிலே யாழ் மாவட்ட செயலகம் இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Articles

Latest Articles