ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு மாவட்டங்களில் முதலிடம் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்கினால் அது நல்ல விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முடியாத வகையில் செயற்படுவதற்கு ஊடக நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சியுடனேயே இருக்கின்றனர் எனவும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் எனவும் மஹிந்த நம்பிக்கை வெளியிட்டார்.
