மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து அடுத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். முன்பே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற பெயரே இந்த படத்திற்கும் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தனிமைப்படுத்தி கொண்ட அவர், அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என கேட்டு கொண்டார்.