மினுவாங்கொட கொத்தணி பரவல் 2 ஆயிரத்து 75 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று மாத்திரம் 61 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். பீசீஆர் பரிசோதனைமூலமே அவர்களுக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கொத்தணி பரவல்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி இக்கொத்தணியால் இதுவரையில் 2 ஆயிரத்து 75 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றுவரை 5 ஆயிரத்து 538 பேருக்கு வைரஸ் தொற்றியது. இதில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 122 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles