‘மினுவாங்கொட கொத்தணி பற்றி விசாரணை நடத்திய 20 சி.ஐ.டியினருக்கு கொரோனா!

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியின் ஆரம்ப மூலத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2இன்கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” கொழும்பு குற்றதடுப்பு பிரிவிடமிருந்து நவம்பர் 5 ஆம் திகதியே விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் 20 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கைகள் இடம்பெற்று விரைவில் விசாரணை நிறைவுசெய்யப்படும்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, உக்ரைன் நாட்டவர்கள் ஊடாகவே 2ஆவது அலை உருவாகியிருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இன்று சபையில் கருத்து வெளியிட்டார்.

Related Articles

Latest Articles