மின் கம்பத்துடன் மோதி வேன் விபத்து – 11 பேர் காயம்!

ஹொரவப்பொத்தானை- கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று இன்று (10) காலை விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles