பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய பூட்டாவத்தை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 30 57 43.வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா










