மின்சார விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் பதில்

தொடர்ச்சியான மின்சார விநியோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் எழுத்துமூலமான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நேற்று ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசியலமைப்பு சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

Related Articles

Latest Articles