கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தண்ண பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இறம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தில் சேர்த்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய ராஜகோபால் தியாகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அண்மையில் டீத்வா புயலால் ஏற்பட்ட பேரிரால் தவலந்தண்ண பகுதியில் பாதிக்கப்பட்ட வீடுகளின் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏணி ஒன்றை வைத்துக்கொண்டு இப்பணியில் ஈடுபட்ட இவர், குறித்த ஏணி மின் கம்பத்தில் மோதியதனால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிகின்றார் என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொத்மலை பொலிசாரா மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
