மின்சாரம் தாக்கி சிறுமி பலி: கம்பளையில் துயரம்!

கம்பளை, வெலம்பொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிலகந்த எனும் பகுதியில் 12 வயது சிறுமியொருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

கண்டியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குரங்கு தொல்லை காரணமாக வீட்டுக்கு மேல் மின்சார கம்பி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுமி மேல் மாடிக்கு சென்றவேளையிலேயே மின்சாரம் தாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலம்பொட பொலிஸவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Articles

Latest Articles