மின்சாரம் தாக்கி மாணவி மரணம்

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் சுரேந்திரன் கவிதா (வயது 15) என்ற மாணவியை சாவடைந்துள்ளார்.

அவரின் சடலத்தைக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Latest Articles