மின்னல் தாக்கியதில் 11 மாடுகள் பலி

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன.

நேற்று (12) மாலை  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.

இதன்போது, மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles