மிளகாய் தூளை கண்களுக்கு தூவிவிட்டு, சினிமாப் பாணியில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பசறை நகரிலுள்ள மருத்துவ நிலையமொன்றில் பணியாற்றும் யுவதியொருவர் வேலை முடிந்த பின்னர், மாலை 6.30 மணியளவில் தனது தந்தை மற்றும் உறவினர் ஒருவருடன் வீடு நோக்கி புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பசறை, 13 ஆம் கட்டை பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர், மூவரின் கண்களுக்கும் மிளகாய் தூளை தூவிவிட்டு, யுவதி அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பசறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
ராமு தனராஜா