மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்!

மிஹிந்தலை புனித பூமியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

மிஹிந்தலை புனித ஸ்தலத்தின் விகாராதிபதி, முப்படையினர், பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து புனித ஸ்தலத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்டார்.

எனினும், சமீபத்தில் அந்த வளாகத்தில் இருந்த அடையாளம் தெரியாத சில நபர்களை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைவரையும் புனித ஸ்தலத்தில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவறானதொரு நியாயமற்ற நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீண்டும் அந்த பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

Latest Articles