மீட்கப்பட்ட என்புத்தொகுதிகள் பாதுகாப்பாக யாழ்.பல்கலையில்

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட 34 என்புத் தொகுதிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட பாடசாலைப் புத்தகப்பை, பொம்மை, காலணி, சிறுவளையல் போன்ற பொருள்கள் நீதிமன்ற கட்டுக்காவலிலும் சான்றுப் பொருள்களாகப் பேணப்பட்டு வருகின்றன என சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் நேற்றையதினம் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:-

மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மூன்று நாள்கள் இடம்பெற்ற வேளையில் மழை காரணமாக நிறுத் தப்பட்டு பின் ஆறுநாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்தன. அதன் பின் இரண்டாம்கட்ட அகழ்வுப்பணி தொடர்ச்சியாக 8 நாள்களாக இடம்பெற்று வருகின்றது. மொத்தமாக 17 நாள்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலின் கீழ் சட்டமருத்துவ அதிகாரி பிரணவனிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கையளிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ். பல்கலைக்கழக மருத்துபீட சட்ட மருத்துவத்துறையில் உள்ள என்பு ஆய்வு கூடத்தில் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளன.

மேலும், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பாடசாலை புத்தகப்பை, பொம்மை,காலணி, சிறு வளையல் போன்ற பொருள்கள் நீதிமன்ற கட்டுக்காவலில் சான்றுப் பொருள்களாக பாதுகாப்பாகப் பேணப்பட்டு வருகின்றன.

தற்போது அகழ்வுப் பணிகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. எந்தப் பொருள்களையும் ஆய்வுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

முழுமையாக அகழ்வுப்பணிகள் நிறைவு பெற்றதன் பிற்பாடே மனித என்புத்தொகுதிகள் சட்ட மருத்துவ தலைமையிலான குழுவின அதிகாரி தலைமையிலான குழுவினரால் ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் இறப்புக்கான காரணம், மீட்கப்பட்ட குறித்த என்புத் தொகுதிகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது என்பன அறிவிக்கப்படும். மேலும் அகழ்வுகள் முடிவுற்றபின் கிடைக்கப்பெற்ற பிற சான்றுப்பொருள்களின் கால எல்லையினை தொல்லியற்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவாவெளிப்படுத்துவார் – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles