உரிய அளவிலான சோளம் தற்போது கிடைத்துள்ளதால் திரிபோஷ உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷ லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்தார்.
நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் 60,000 திரிபோஷ பொதிகளை உற்பத்தி செய்து பின்னர் அவை நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ,அம்மாக்களுக்கான த்ரிபோஷா தற்போது தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.