மீன் விலை குறைப்பு?

எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 450 ரூபாவை எட்டியுள்ள நிலையில், பாண் இறாத்தல் ஒன்றின் விலையினை 350 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென   உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles