உலகெங்கும் நேற்று சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கின. இதனால், பயனர்கள் கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.
எனினும், ஒரு மணித்தியாலத்தின் பின் சமூக வலைத்தளங்கள் வழமைக்குத் திரும்பின. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவ்வாறு இடம்பெற்றதாக Meta தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அமெரிக்க பங்குச்சந்தையில், Meta பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 வீதம் குறைந்துள்ளது.
இதனால் Meta நிறுவன பிரதானி மார்க் சக்கர்பெர்கின் (Mark Zuckerberg) நிகர மதிப்பு சுமார் 3 பில்லியன் டொலர்கள் வரை குறைவடைந்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது.