2021 இல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதியும் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஓக்டோபர் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன.










