முதல் 4 மாதங்களில் 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையானது 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 3,800,30 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானமே கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இந்த வருடத்தில் அது 9.6 வீத அதிகரிப்பைக் கொண்டுள்ளது என்றும் இந்த வருடத்தில் கடந்த 4 மாதங்களில் வர்த்தகப் பொருட்களின் வருமானம் பெருமளவில் அதிகரித்து காணப்படுவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 11.87 வீத அதிகரிப்பு கொண்டுள்ளதுடன் கடந்த வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட 818,20 மில்லியன் டொலரிற்குப் பதிலாக இம்முறை ஏப்ரல் மாதத்தில் 915.30 மில்லியன் ​ெடாலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles