முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்

இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா – சிட்னியில் இன்று காலமானார்.

சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

இலங்கைத் தமிழ் முன்னணி சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிவா பசுபதி, அரச வழக்குரைஞர்களின் இயக்குநராகப் பணியாற்றினார்.

1974 முதல் 1975 வரை அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், பின்னர் அவர் 1975 முதல் 1988 வரை சட்டமா அதிபராகவும் பணியாற்றினார்.

சிவா பசுபதிக்கு 1989 ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் இலங்கை அரச தலைமை வழக்குரைஞரும், இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபருமான சிவா பசுபதி ஓய்வுபெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வாழ்ந்து வந்தார்.

2002இல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசுக்கும் இடையில் பேச்சுகள் தொடங்கிய போது, விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுவுக்கு உதவவும் ஆலோசனைகளை வழங்கவும் விடுதலைப்புலிகளால் நிறுவப்பட்ட அரசியல் விவகாரக் குழுவுக்கு சிவா பசுபதி சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார்.

2002 – 2006 காலப் பகுதியில் நோர்வே தலைமையிலான அமைதிப் பேச்சுகளில் அவர் பங்கேற்றார்.

சிவா பசுபதி ஆத்திரேலிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும், நியூ சவுத் வேல்சு மாநிலத் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles