தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடை பயணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் அதனை வரவேற்போம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
‘சூரியன்’ வானொலியின் இன்று காலை ஒலிபரப்பான விழுதுகள் அரசியல் நிகழ்ச்சியில் பழனி திகாம்பரம் எம்.பி. பங்கேற்றிருந்தார்.
இதன்போது ” தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் தற்போது சுமுகமான உறவு நிலவுகின்றது. உங்களின் பேரணிக்கு இதொகாவின் ஆதரவு கோரப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திகாம்பரம் இவ்வாறு கூறினார்.
” நாம் பொதுவாக அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். வந்தால் (இதொகா)வரவேற்போம். அவர்கள் (இதொகா) நவம்பரில் மலையகம் – 200 நிகழ்வை செய்யவுள்ளனர். அதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம்.” – எனவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்தால் நல்லம். இது குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறித்த நேர்காணலில் திகாம்பரம் கூறினார்.
முழுமையான நேர்காணல் வருமாறு
