ஹங்குரென்கெத்த பிரதேச செலயகத்துக்குட்பட்ட முல்லோயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரென்கெத்த பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லோயா தோட்ட மேற்பிரிவு மற்றும் கீழ்ப்பிரிவில் தலா ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு அவர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை முல்லோயா தோட்டத்தில் 16 தொழிலாளர் குடும்பங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. இவர்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படவேண்டிய நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று
ஹங்குரென்கெத்த பிரதேச உறுப்பினர் சதானந்தன் மேலும் தெரிவித்தார்.










