மூன்றாவது இடம் யாருக்கு? மொரோக்கோ, குரேஷியா இன்று மோதல்!

22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, கட்டார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி இன்று நடக்கிறது. இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் ‘எப்’ பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Related Articles

Latest Articles