” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (19) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
மொறட்டுவையிலிருந்து கொழும்பு நகர மண்டபம் வரை இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை கடந்த 17 ஆம் திகதி முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.