தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
இதையடுத்து, மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரியஅவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். நாளை இரவு 7.15மணி அளவில் நடைபெறும் விழாவில், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி, பங்களாதேஷ் பிரதமர், நேபாள பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
