மூன்று வருடங்களின் பின்னர் எசலபெரஹராவை பார்வையிட அனுமதி

கண்டி வரலாற்று புகழ்மிக்க வருடாந்த எசல பெரஹரவை, மூன்று வருடங்களின் பின்னர், பொதுமக்கள் பார்வையிடவுள்ளனர்.

பொது மக்கள் மற்றும் வாகன கட்டுப்பாடுகளுக்காக 6000 பொலிஸார் சேவைக்கு அமர்த்தப்படவுள்ளதாக மத்தியமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஜ்ஜிவ தர்மரத்ன தெரிவித்தார்.

கண்டி எசல பெரகரவை ஆகஸ்ட் (02) முதல் (12) ஆம்திகதி வரை மக்கள் பார்வையிட அனுமதிக்கபடவுள்ளனர்.

02ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை கும்பல் பெரஹராவும் 07 முதல் 12 ஆம் திகதி வரை ரத்தொலி பெரஹராவம் 12ஆம் திகதி பகல் பெரஹராவும் நடைபெறவுள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் கொவிட் 19 தாக்கத்தால் கடந்த மூன்று வருடமாக எசபெரஹரவை பாரவையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles