மெக்சிகோவில் கோர விபத்து: 41 பேர் பலி!
மெக்சிகோவில் பஸ்ஸொன்று, லொறிமீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு அதிகாலை நேரத்தில், 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த பஸ், லொறி மீது வேகமாக மோதியுள்ளது. இதையடுத்து பஸ் தீ பிடித்து எரிந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்றும் சிலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.