மெனிக்கே மகே ஹித்தே…” என்ற பாடல் மூலம் இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பெருமை சேர்ந்த இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு, கொழும்பில் காணியொன்றை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி கொழும்பில் முக்கிய நிர்வாக நகராகக் கருதப்படும் பத்தரமுல்ல − ரொபட் குணவர்தன மாவத்தையிலுள்ள, வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு உரித்தான 10 பச்சர்ஸ் காணியை அவருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார்.
இலங்கைக்கு 1996ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கு அண்மித்த பகுதியிலேயே இந்த காணி அமைந்துள்ளது.
இலங்கையை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்றமையை கெளரவிக்கும் வகையிலேயே, யோஹானிக்கு இவ்வாறு காணி வழங்கப்படுகின்றது.
