மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்று, 2-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி காலியில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 204 ஓட்டங்களையும், மேற்கிந்திய தீவுகள் அணி 253 ஓட்டங்களையும் குவித்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகுள் இழப்புக்கு 345 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை ஆட்டத்தை நிறுத்தியது இலங்கை. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 132 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இதன்படி இலங்கை அணி 164 ஓட்டங்களால் 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்றது.
தனஞ்ச டி சில்வா ஆட்டநாயகனாகவும், ரமஷ் மென்டிஸ் தொடர் ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
