‘மேற்குத் தொடர்ச்சிமலை’ திரைப்படத்தில் கங்காணியாக நடித்த மக்கள் கலைஞன், ஒய்வுபெற்ற ஆசிரியர், வரலாற்று அறிஞர், தீவிர வாசிப்பாளர் என பன்முகம் கொண்ட அந்தோணி வாத்தியார் காலமானார்.
மேற்குத் தொடர்ச்சிமலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
மேற்குத் தொடர்ச்சி மலையான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதுடன், காணி உரிமையும் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இயல்பு வாழ்க்கைக்கு இசைவாக மிகவும் தத்ரூபமாக குறித்த படம் இயக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இயக்கப்பட்டிருந்தாலும் மலையக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.