இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 12 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வழியாகத் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 4ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் தமது பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற இந்தியக் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான படகு அகதிகளை மீட்டு இராமேஸ்வரத்துக்குக் கொண்டு சென்றது.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் தற்போது பொலிஸாரின் விசாரணையில் உள்ளனர்.
இலங்கையில் இருந்து இவ்வாறு சென்றவர்களில் 3 ஆண்களும், 3 பெண்களும், 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
மூன்று குடும்பங்களைச் சேர்ந்த இந்த 12 பேரும் வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.










