” அடுத்தவாரம் மேலும் 40 லட்சம் சினோ பாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளன. எனவே, ஆகஸ்ட் 2 ஆம் வாரமளவில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க முடியும்.
அதன் பின்னர் 18 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும். அத்துடன், 12 வயது முதல் 18 வயதுவரையான மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை முன்வைத்துள்ளது. மாணவர்களுக்கு எந்த தடுப்பூசி சிறந்தது என ஆராய்ந்து பரிந்துரையை முன்வைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.”
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.










