பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும்.
ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள், ஜெர்சி சட்டைகள் ஆகியவற்றுக்கான தேவை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதை அது நிரூபிப்பதாகக் கூறப்பட்டது.
ஏலம் போயுள்ள காலணிகளை ஜோர்டன் 1998ஆம் ஆண்டு நடந்த என்.பி.ஏ போட்டியின் இறுதிச்சுற்றில் அணிந்திருந்தார். அந்தச் சுற்றில் ஜோர்டனின் சிக்காகோ புல்ஸ் அணி வெற்றிபெற்று என்.பி.ஏ போட்டியை வென்றது. அது ஜோர்டனின் ஆறாவது என்.பி.ஏ வெற்றியாக இருந்தது.
இறுதிச்சுற்று முடிந்தவுடன் அவர் காலணிகளில் கையெழுத்திட்டு அதைத் திடலிலிருந்து வெளியில் போகும் பந்துகளை எடுத்துக்கொடுக்கும் சிறுவனிடம் கொடுத்தார்.
ஆனால் ஏலத்தில் காலணிகளை விற்றது அந்தச் சிறுவன் அல்ல. ஏலத்தில் விற்றதும் வாங்கியதும் யார் என்பதை சோதபிஸ் நிறுவனம் குறிப்பிடவில்லை.
