முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் மைத்திரி தரப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போதே தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமைப்பதவிக்கு விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனையடுத்து பதில் தலைவராக நியமிக்கப்பட்ட விஜயதாச ராஜபக்சவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி அறிவித்துள்ளார்.
அதேவேளை, சந்திரிக்கா தரப்பு, சுகவின் பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வாவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
