உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் சிஐடியினர் அவரிடம் சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
இன்று(25) முற்பகல் 10.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அவரிடம் பிற்பகல் 3.50 வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன கடந்த 22 ஆம் திகதி அறிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
