‘மொட்டா’, ‘தொலைபேசியா’? – வெளியானது புதிய தகவல்

” நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பில் கட்சி செயலாளருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள இருவரும் விரைவில் அரசுடன் இணைவார்கள் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே அத்தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. அசோக அபேசிங்க மறுத்துள்ளார்.

” ஐக்கிய மக்கள் சக்தி என்பது ஜனநாயக்கட்சி. அவ்விருவருக்கும் மாவட்டம் தொடர்பில் பிரச்சினை இருக்கலாம். அதனை பேசி தீர்த்துக்கொள்வோம். ஆனால் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.” – என்றும் அசோக அபேசிங்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles