மொட்டு கட்சி மூன்றிலிரண்டு பலத்தை பெறும் அறிகுறி!

பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறக்கூடும் என ‘த லீடர்’ எனும் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ‘மொட்டு’ 154 ஆசனங்களை பெறும் என அக்கட்சியின் தொடர்பாடல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ள பிரதிநிதிகள் வெளியிடும் தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வி அடையும் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாத நிலை காணப்படுவதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் ரணில்விக்கிரமசிங்க பாராளுமன்றம் தெரிவாக முடியாது எனவும் மேற்படி இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles