மொட்டு கட்சியிடம் அடிபணிந்து மன்னிப்புகோர விமல் மறுப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து பகிரங்கமாக மன்னிப்பு கோருவதற்கு விமல்வீரவன்ச தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகின்றார். இதனால் மொடடுக்கட்சி காரர்கள் கடும் சீற்றத்தில் உள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு, அவ்விடத்துக்கு கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என விமல்வீரவன்ஸ வெளியிட்டிருந்த கருத்தானது அரச கூட்டணிக்குள் பெரும் மோதலை உருவாக்கியது.

” விமல்வீரவன்சவின் கருத்து தவறு , அதனை அவர் மீளப்பெற வேண்டும் என்பதுடன்,  அதற்காக  மன்னிப்பும்கோர வேண்டும்.” – என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதனால் விமலுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்குமிடையில் கடும் சொற்போரும் மூண்டது. பங்காளிக்கட்சி தலைவர்களுள் சிலர் விமல் பக்கம் நின்றனர். விமல் மன்னிப்பு கோர வேண்டும் என்பதில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் உறுதியாக நின்றனர்.

விமல் அறிவிப்பு விடுத்து ஒரு மாதம் கடக்கவுள்ள நிலையிலும் அவர் இன்னும் மன்னிப்பு கோரவில்லை.

அத்துடன், தமது கட்சியின் தலைமைத்துவம் குறித்து பிற நபர்கள் கருத்து வெளியிடமுடியாது எனவும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

Related Articles

Latest Articles