ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் போட்டியிடும் எனவும், மொட்டு சின்னத்தில் எவ்வித மாற்றமும் வராது எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் மொட்டு சின்னம் நிச்சயம் இருக்கும். வேட்பாளர் ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி முடிவெடுத்துவிட்டது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும்வரை வேட்பாளரை பெயரிடாமல் இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தம்மிக்க பெரேரா, நாமல் ராஜபக்ச ஆகியோர் தொடர்பில் கட்சிக்குள் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது. தான் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் என்பதை ரணில் அறிவித்துவிட்டார். அவர் மொட்டு சின்னத்தை விரும்பவில்லை. எனவே, மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் என்பது உறுதி.” – என்றார் உதயங்க.