ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தின கூட்டத்தின்போது பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொட்டு கட்சியின் மே தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க வைப்பதற்குரிய ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முன்னெடுத்துவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், வேட்பாளர் சம்பந்தமாகவும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன.
எனினும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து மொட்டு கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை. ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படுமா என்பது பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே மே தினத்தன்று ஜனாதிபதி தேர்தல் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகின்றது.










