மொட்டு கட்சியின் பெரும்பான்மை ஆதரவு ரணிலுக்கே: இன்று மாலை விசேட சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.

இந்த தகவலை மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலை 5.30 மணிக்கு சந்தித்து, அவருக்கான ஆதரவு தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, ஆட்களை அழைத்துவந்து மே 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியதுபோன்றதொரு தவறான முடிவையே மொட்டு கட்சி நேற்று எடுத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

 

Related Articles

Latest Articles