மொட்டு கட்சியை கள்வர் கூட்டமென விளாசி தள்ளிய சஜித்

ஆட்சியை பொறுப்பேற்குமாறு  சிலர்  கேட்டபோது, ஐக்கிய மக்கள்  சக்தியோ அல்லது தானோ பொறுப்புகளை ஒருபோதும்  தட்டிக்கழிக்கவில்லை எனவும் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்  சென்ற மொட்டு கள்ளக்கூட்டம்  மற்றும் ராஜபக்‌ஷர்களுடன் இணைந்து அரசை அமைக்க முடியாது எனவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாச தெரிவித்தார்.

இன்று இந்நாட்டு மக்களுக்கு  இந்த அரசாங்கம் மீது ஒரு துளியளவும் நம்பிக்கை இல்லை என  தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,  இவ்வாறான குழுக்களுடன் இணைந்து ஆட்சியமைப்பதன்  மூலம் இந்நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தி  கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட் டத்தை தொடங்கியுள்ளதோடு, இதன் ஓர் அங்கமாக குருநாகல்  மாவட்டத்தின் மாவத்தகம தேர்தல்  தொகுதிக்கூட்டம் நேற்று (19)  இடம்பெற்றது.

பாராளுமன்ற  உறுப்பினரும்,முன்னாள் பிரதி அமைச்சரும், மாவத்தகம  தேர்தல் தொகுதியின்  பிரதான அமைப்பாளருமான ஜே.சி. அலவத்துவலவின் ஏற்பாட்டில்  இடம் பெற்ற இக்கூட்டத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாடு தொடர்ந்தும் மூடிய தன்மையுள்ள ஒரு நாடாகஇருக்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர், உலக நாடுகளுடன் தொடர்புகளை பேனும், உலக நாடுகளுக்கு நமது  நாட்டை அனுகுவதற்கு ஏற்ற திறந்த தன்மை மற்றும் உலக நாடுகளுடன்  நட்புறவுகளை பேனும் நாடாக மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles