அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யானை, மொட்டு மற்றும் அன்னம் அல்லாத பொதுவானதொரு சின்னத்தில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கும் அறிவிப்பை எதிர்வரும் 16 ஆம் திகதி வெளியிட ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இக்காலப்பகுதி இன்னும் உறுதியாகவில்லை.
கூட்டணி, சின்னம் உள்ளிட்ட விடயங்களைக் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.