மொனராகலையில் இருவருக்கு கொரோனா – 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மொனராகலை மாவட்டத்தில் கொவிட் –  19 தொற்றுடையதாக இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மொனராகலை சுகாதார சேவைப் பணிப்பாளர் பி.பி.கே. அதிகாரி இன்று 15-07-2020 தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“மொனராகலை மாவட்டத்தில் எத்திமலை, சியாம்பலாண்டுவை ஆகிய பகுதிகளின் கோவிட் 19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட ஐவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குற்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் நோய்த் தொற்றுக்கிழக்காகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூவருக்கும் நோய்த் தொற்று இல்லையென்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.

அத்துடன், கோவிட் 19 தொற்றுடையவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 68 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் எட்டுப் பேர் அரச தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதுடன் ஏனைய 60 பேர் சுய தனிமைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொதுமக்கள் அனைவரும், கோவிட் 19 சுகாதார வழிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுமாறும், பொதுமக்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா பதுளை

Related Articles

Latest Articles